காதலுக்கு எதிர்ப்பு... சப்பாத்தியில் விஷம் வைத்து பெற்றோர் உட்பட குடும்பத்தினர் 13 பேரைக் கொன்ற இளம்பெண்!

 
காதலுக்கு எதிர்ப்பு... சப்பாத்தியில் விஷம் வைத்து  பெற்றோர் உட்பட குடும்பத்தினர் 13 பேரைக் கொன்ற இளம்பெண்!

தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் பாகிஸ்தானில், சப்பாத்தியில் விஷம் கலந்து தாய், தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அடுத்தடுத்து 13 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்திருந்தது தெரிய வந்தது.

காதலுக்கு எதிர்ப்பு... சப்பாத்தியில் விஷம் வைத்து  பெற்றோர் உட்பட குடும்பத்தினர் 13 பேரைக் கொன்ற இளம்பெண்!

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண், வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ள நிலையில், இளம்பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அவளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த வாலிபரை திருமணம் செய்து வைக்கவும் மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், வீட்டில் சப்பாத்தி சமைக்க பயன்படுத்தும் கோதுமை மாவில் விஷத்தை கலந்துள்ளார். காதலனும் இளம்பெண்ணும் சேர்ந்து திட்டமிட்டுள்ள நிலையில், விஷத்தை அவளது காதலன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

காதலுக்கு எதிர்ப்பு... சப்பாத்தியில் விஷம் வைத்து  பெற்றோர் உட்பட குடும்பத்தினர் 13 பேரைக் கொன்ற இளம்பெண்!

இது தெரியாமல் சம்பவத்தன்று அந்த கோதுமை மாவில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் வழக்கம் போல் சப்பாத்தி சமைத்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளம்பெண்ணையும், அவளது காதலனையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.  இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!