அதிமுகவில் பிரிந்தவர்கள் சேரவில்லையெனில் எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது... ஓபிஎஸ் பேட்டி!

 
ஓபிஎஸ்

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று விட்டு இன்று சென்னை திரும்பிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , “பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சிஅளிக்கிறது” என தெரிவித்தார்.

சசிகலா

அப்போது, உங்கள் அணியில் இருந்த புகழேந்தி, ஜே.சி.டி பிரபாகரன், கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் அதிமுக ஒருங்கிணைப்பு குழு தொடங்கியுள்ள நிலையில் அதில் நீங்கள் இணைவீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அவர்கள் எங்கிருந்தாலும் வாழட்டும்” என தெரிவித்தார். மேலும், இராமநாதபுரம் மக்கள் கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை எனக்கு  வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஓபிஎஸ், இபிஎஸ் நியமனம் செல்லும்! ஐகோர்ட்டு அதிரடி!

திமுக மற்றும் திமுக கூட்டணிகள் 40 க்கு 40 வெற்றி குறித்தான கேள்விக்கு, அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜம். மக்களின் மன நிலை பொறுத்து அது மாறும் என தெரிவித்தார்.தமிழகத்தில் பாஜக வென்ற வாக்குகள் ,ஓ பன்னீர் செல்வம், டிடிவி ஆதரவு வாக்குகள் என்று சொல்லப்படும் கருத்து குறித்த கேள்விக்கு, இது மட்டும் இன்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உழைப்புக்கு கிடைத்த வெற்றி என கூறினார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது என ஓபிஎஸ் தெரிவித்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web