சூப்பர்... தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவு!

 
காவிரி ஆறு வைகை தாமிரபரணி
 

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து  தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து  பிரச்சனை நீடித்து கொண்டே இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வை கொண்டு வர  காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டன.  தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்பது தான் கர்நாடகாவின் நிலைப்பாடு.  
2023 ஐ பொறுத்தவரை தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரில் பாதி அளவு தான் கர்நாடகா தந்தது.அதே போல் இந்த ஆண்டும்  ஜூன் மாதம் வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.  இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர் சரிவில் இருந்து வந்தது. அதுவும் இல்லாமல் குறுவை பாசனத்திற்காக  ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.

காவிரி
இது குறித்து விவாதிக்க கடந்த மாத இறுதியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடத்தப்பட்டது.  அதில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான நிலுவைத் தண்ணீரை திறக்க தமிழகம் கோரிக்கை வைத்தது.  தங்களுக்கு குடிநீர் பஞ்சம் வந்து விடும் என்னும் காரணம் காட்டி தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா நழுவியது. இதனால் வேறு வழியின்றி காவிரி ஆணையம் முடிவை பின்பு அறிவிப்பதாகக் கூறி கூட்டம் அப்போதைக்கு முடித்து வைக்கப்பட்டது.  இந்நிலையில் இன்று ஜூலை 11ம் தேதி வியாழக்கிழமை  காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் இன்று காணொலி மூலம் நடத்தப்பட்டது. இந்த காணொலியில்  தமிழக அரசு   “கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கர்நாடகா உரிய நீரை திறக்கவில்லை . பிப்ரவரி முதல் மே வரையிலான நீரை உரிய முறையில் திறக்கவில்லை.  மேலும், இந்த ஆண்டு கர்நாடகாவில் வழக்கமான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இருந்தாலும் தண்ணீரை திறக்காமல் இருப்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறுவது போன்றது.  இதனால் உடனடியாக தமிழகத்திற்கு தண்ணீரை திறக்க உத்தரவிடுங்கள்” என்ற வாதத்தை முன்வைத்தனர்.

மேட்டூர் அணை


அதற்கு கர்நாடகா  “எங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது, எங்கள் அணைகளில் இருக்கும் நீரின் அளவு வழக்கமானதை விட 28% சதவீதம் குறைவாகவே உள்ளது.  தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீர் அவ்வப்போது திறக்கப்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டை காட்டிலும் கர்நாடகாவில் மழைப் பொழிவு சற்று குறைவு தான். இதனால், தண்ணீர் வரத்து போன்ற விஷயங்களை  கவனத்தில் கொள்ள வேண்டும்”, எனக் கூறியது.  
இருதரப்பு வாதத்தையும் கேட்ட காவிரி ஒழுங்காற்று குழு, “தமிழகத்திற்கு நாளை முதல்  31ம் தேதி வரை தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என  உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த உத்தரவுக்கு தமிழக விவசாயிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web