மறைந்தும் நெகிழ்ச்சி... கண்கள், தோல், இதயவால்வு, சிறுநீரகம் என 7 பேருக்கு உடல் உறுப்பு தானம் !

 
மகேஷ்

 சென்னை மணலி புதுநகர் எழில் நகரில் வசித்து வருபவர்  மகேஷ்.  இவர் மின் சக்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.    இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள். மகேஷ் மே 5ம் தேதி  பைக்கில் தனது நண்பரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு பின்னர்  வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது நேருக்கு நேர் மோதியது.  இதனால் கீழே விழுந்த மகேஷின்  தலையில் பலமாக அடிபட்டது.   அக்கம்பக்கத்தினர் மகேசை மீட்டு  சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் நேற்று முன்தினம் மகேஷ் மூளைச்சாவு அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.  இதனால் அவரது உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன் வந்தனர்.  அவரது உடலில்  கல்லீரல் , 2  சிறுநீரகம் , இதய வால்வு, தோல், 2 கண்கள் என மொத்தம் 7 உறுப்புக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 5 நோயாளிகளுக்கும்,  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2  நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டது.

உடல் பரிசோதனை

 விபத்தில் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததால் அதனை பயன்படுத்த முடியவில்லை.  மகேஷின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில்  7 பேர் மறுவாழ்வு அடைந்துள்ளனர். கணவர் இறக்கும் தருவாயிலும் அவரது உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வந்த அவரது உறவினர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web