கணவரின் உடல் உறுப்புக்கள் தானம்... கதறித்துடித்த நிறைமாத கர்ப்பிணி மனைவி!

 
தங்கப்பாண்டியன்

சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டிரோடு பசும்பொன்நகரில் வசித்து வந்தவர்  25 வயது  தங்கபாண்டியன். இவர்  பேக்கரி மாஸ்டராக  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலுள்ள ஸ்வீட் கடையில் பணிபுரிந்து வந்தார். கடை உரிமையாளர்  உறவினரான அம்ச ரேணுகாவை கடந்த வருடம் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார்.  இருவரும் திருமணத்துக்குப் பிறகு திருத்தங்கலில்  வசித்து வந்தனர். இதில்  அம்ச ரேணுகா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

உறுப்பு தானம்

இவருக்கு ஜூன் 10ம் தேதி குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள்  அறிவுறுத்தியுள்ளார். மே 29ம் தேதி தங்கப்பாண்டியன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்தில் சிக்கி கொண்டார். அதில்  மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  தங்கபாண்டியன் மூளை சாவடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க குடும்ப உறுப்பினர்கள்  சம்மதம் தெரிவித்தனர்.அதன்படி மதுரை தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல் உறுப்புகளை தானமாக பெற்றது.

ஆம்புலன்ஸ்

அதன் பிறகு தங்க பாண்டியனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம்  மதுரையிலிருந்து திருத்தங்கலிலுள்ள மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. மயானத்தில் மூளை சாவடைந்த தங்கபாண்டியனின் குடும்பத்தினர், உறவினர்கள்  நண்பர்களும் திரண்டு நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தங்கபாண்டியன் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதால் அரசு மரியாதை அவருக்கு செலுத்தப்பட்டது. அவரது உடலை பார்த்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி கதறி துடித்த காட்சி காண்பவர்கள் கண்களை குளமாக்கியது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web