10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!

 
மதிப்பெண்

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் கடந்த மாா்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் இன்று செப்டம்பர் 3ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.

மதிப்பெண்

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு மே மாதம் 16ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து மாணவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 19ம் தேதி முதல் வழங்கப்பட்டன. இருப்பினும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் உடனடியாக வழங்கப்படும்! பள்ளிக் கல்வி அமைச்சர் உறுதி!

இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தோ்வா்கள் தங்கள் தோ்வு மையங்களிலும் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?