ஆகஸ்ட் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்!

தமிழகத்தில் 2023-24ம் ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியான. இவர்களுக்கான தற்கால மதிப்பெண் சான்றிதழ்கள் ஏற்கனவே வழங்கி முடிக்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 1ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு (மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் 1 முதல் வழங்கப்படும் என்று சற்று முன் பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களுக்கும் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கூடுதல் தகவல்களை மாணவர்கள் அறிந்து கொள்ள www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!