பிரபல ஆஸ்கர் நடிகர் காலமானார்.... ஹாலிவுட்டில் பெரும் சோகம்!
பிரபல ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் ராபர்ட் ரெட்போர்ட். இவர் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 89. இவர் அமெரிக்காவின் உட்டா மலையில் இருக்கும் சன்டான்ஸில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவர் 1960களில் பிரபல நடிகர். 'தி கேண்டிடேட்', 'ஆல் தி பிரசிடெண்ட்ஸ் மென்' மற்றும் 'தி வே வி வேர்' போன்ற படங்களில் மூலம் உலகப்புகழ் பெற்றார். 'ஆர்டினரி பீப்பிள்' படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை வென்றவர். ஹாலிவுட் திரையுலகில் நடிகர், இயக்குனர் மற்றும் சுயாதீன சினிமாவின் காட்பாதர் என பன்முக திறமையாளராக அறியப்பட்டார். ஜேன் போண்டா, மெரில் ஸ்ட்ரீப் மற்றும் டாம் குரூஸ் ஆகியோர் சக நடிகர்கள்.
16-Sep-2025 1969ம் ஆண்டு வெளியான 'புட்ச் காசிடி அண்ட் தி சன்டான்ஸ் கிட்' திரைப்படத்தில் நியூமனுக்கு ஜோடியாக ரெட்போர்ட் தந்திரமான குற்றவாளியாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்றது. 1973ம் ஆண்டின் சிறந்த படமான ஆஸ்கர் விருது பெற்ற 'தி ஸ்டிங்' படத்திலும் அவர் நியூமனுடன் இணைந்தார். மேலும் அவர் 1985ம் ஆண்டின் சிறந்த படமான 'அவுட் ஆஃப் ஆப்பிரிக்கா' படத்தில் நடித்திருந்தார். 2013ம் ஆண்டில் 'ஆல் இஸ் லாஸ்ட்' திரைப்படத்தில் கப்பல் விபத்துக்குள்ளான மாலுமியாக நடித்து படத்தின் ஒரே நடிகராக இருந்தார்.

2018ம் ஆண்டில், அவர் தனது பிரியாவிடை திரைப்படமான 'தி ஓல்ட் மேன் அண்ட் தி கன்' படம் உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்றது. 80 வயதில் தான் ஓய்வு பெறுவதற்கும் என் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்கும் நேரம் வந்துவிட்டது என பதிவிட்டிருந்தார். இவருக்கு 2 மனைவிகள் 4 குழந்தைகள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
