ஓ.ஐ.எஸ். ஆர்.காங்கிரஸ் கட்சி படுதோல்வி.. ரூ.30 கோடி பந்தயம் கட்டிய நபர் எடுத்த விபரீத முடிவு!

 
வேணுகோபால் ரெட்டி

ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடந்தது. அங்கு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஓ.ஐ.எஸ். ஆர்.காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இந்நிலையில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஓ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஓ.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெறும் என்று 30 கோடி ரூபாய் வரை பந்தயம் கட்டியவர் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐகவர்பு வேணுகோபால் ரெட்டி (வயது 52). ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரான இவர், தேர்தலில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று சுற்றுவட்டார கிராம மக்களிடம் சுமார் ரூ.30 கோடி பந்தயம் கட்டினார். இந்த நிலையில் கட்சி படுதோல்வி அடைந்ததால், வீடு திரும்பாமல் தலைமறைவானார்.

வேணுகோபால் ரெட்டி தலைமறைவானதைத் தொடர்ந்து, அவரிடம் பந்தயம் கட்டியவர்கள் அவரது வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து ஏசி, சோஃபாக்கள், படுக்கைகள், வாஷிங் மிஷின்கள், மின்விசிறிகள் உள்ளிட்ட கைக்குக் கிடைக்கும் பொருட்களை எடுத்துச் சென்றனர். இதனால் மனமுடைந்த வேணுகோபால ரெட்டி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web