என்னை கொலை பண்ணிடுவேன்னு மிரட்டறா... மருமகள் குறித்து மாமியார் புகார்!

 
திரிபுரசுந்திரி


 
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தில் வசித்து வருபவர்  திரிபுரசுந்தரி. இவருக்கு அதே கிராமத்தில் அவரது பெயரில் ஒரு மாடி வீடு மற்றும் நிலம் இருக்கிறது. இந்த வீடு மற்றும் நிலத்தை அவரது மகன் குமரேசன், மருமகள் சத்யா  இருவரும் அபகரித்துக் கொண்டதுடன் மூதாட்டியையும் துன்புறுத்தியுள்ளனர்.  இதுகுறித்து மூதாட்டி திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 


இந்நிலையில் மகன் மற்றும் மருமகளால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும்,  தன்னிடம் இருந்து ஆக்கிரமித்துக் கொண்ட இடம் மற்றும் நிலத்தை மீட்டுத் தரவும் வலியுறுத்தி மூதாட்டி திரிபுரசுந்தரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கண்ணீர் மல்க வந்து  மனு அளித்தார். மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web