சதத்தைத் தாண்டிய வெயில்... இன்னும் 2 நாட்களுக்கு தொடரும்.. பத்திரமா இருக்க மக்களே!

 
வெயில்

ரொம்பவே பத்திரமா இருங்க மக்களே... தேவையில்லாமல் பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராதீங்க. அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும், தமிழகத்தில்.. குறிப்பாக சென்னை, வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் வெயில் சதத்தைத் தாண்டி தன் உஷ்ணத்தைக் கொட்டி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வெயில் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானவிலை மையம் எச்சிரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நிலவி வரும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த வெயில் மேலும் இரு தினங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவசியம் ஏற்பட்டாலொழிய வீட்டை விட்டு வெளியே வராதீங்க.

தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில்! பொதுமக்கள் அவதி!

சென்னையைப் பொருத்தவரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்றும், இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்பதால் அதிகளவில் பழச்சாறு, மோர், தண்ணீர் என அருந்துங்கள்.

Heat wave

வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் பகல் நேரத்தில் வெளியே செல்வதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்க.  உடலில் நீர்சத்து எப்போதும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை கொஞ்சம் தளர்வான ஆடைகளையே உடுத்துங்க. வெயில் நேரிடையாக உடல் மேல் படுவதைத் தவிர்த்துடுங்க. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web