முறையா எங்களை கூப்பிடவே இல்ல... விஜயகாந்த்துக்கு பத்ம விருது வழங்குவதில் தாமதம்... பிரேமலதா குற்றச்சாட்டு!

 
விஜயகாந்த்

 நேற்று உஷா உதூப் வெங்கையா நாயுடு உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது  நேற்று வழங்கப்படவில்லை. மத்திய அரசு கடந்த ஆண்டு மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருதை அறிவித்தது. டெல்லியில் நேற்று நடந்த விழாவில் விஜயகாந்துக்கு பத்மபூஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  அடுத்து நடைபெறும் விழாவில் விஜயகாந்துக்கு பத்மபூசன் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம விபூஷன் விருது கொடுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.  மத்திய அரசிடமிருந்து இதுவரை முறைப்படி எந்த அழைப்போ, அறிவிப்போ  அவருடைய குடும்பத்திற்கு கொடுக்கவில்லை என விஜயகாந்த் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், விருது குறித்து மத்திய அரசு சார்பாக இதுவரை யாரும் பிரேமலதா விஜயகாந்திடமோ மற்றும் அவர்களுடைய மகன்களிடமோ  இதுவரைக்கும் எதுவும் பேசவில்லை எனத் தெரிகிறது.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web