பகீர்... தாயிடமிருந்த கைக்குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய்!

 
நாய்

சென்னை அடுத்துள்ள திருவொற்றியூரில், தாயின் கையில் இருந்த ஒரு வயது குழந்தையை தெருவில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று, கடித்துக் குதறி, முகத்தை சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவொற்றியூர் பெரியார் நகர், விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் தேவி. இவருடைய ஒரு வயதுக் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தெருநாய் ஒன்று, திடீரென குழந்தை மீது பாய்ந்து, குழந்தையின் முகத்தில் கடித்துக்குதறியது. திடீரென தனது குழந்தையை தெருநாய் கடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேவி, அலறி கூச்சலிட்டார். தேவியின் அலறல் சப்தம் கேட்டு, குழந்தையை காப்பாற்ற வந்த தாத்தாவையும் தெருநாய் கடித்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தெருநாயை அங்கிருந்து விரட்டியதால், தப்பி ஓடிய நாய், அதே தெருவில் மேலும் 4 பேரை கடித்து குதறியது.

சென்னையில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

இதையடுத்து காயமடைந்த குழந்தை உட்பட அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிவதாகவும், இவை கடித்து விடுமோ என்ற அச்சத்திலேயே தினந்தோறும் நடமாட வேண்டிய அவல நிலை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தெருநாய்களை பிடிக்க மக்கள் கோரிக்கை

இது தொடர்பாக பலமுறை மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும், ஊழியர்கள் நாய்களைப் பிடித்து சென்று விட்டு, பின்னர் மீண்டும் அதே பகுதியில் விட்டு விடுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web