பகீர்... கல்லூரிக்குள் மாணவியை முத்தமிட்டு, ஆடைகளை கலைத்து வீடியோ பதிவு... மாணவர்கள் தொடர் போராட்டம்!

நாடு முழுவதுமே குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியெடுக்கும் விதமாக லக்னோவில் உள்ள ஐஐடி வளாகத்திற்குள்ளேயே அதிகாலை ஆண் நண்பருடன் வாக்கிங் சென்றுக் கொண்டிருந்த மாணவியை அடையாளம் தெரியாத நபர்கள், வழிமறித்து... வலுக்கட்டாயமாக மாணவியை முத்தமிட்டு, அவரது ஆடைகளைக் களைந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாணவி புகாரளித்துள்ள நிலையில், வளாகத்திற்குள்ளேயே பாதுகாப்பு இல்லை எனக்கூறி, கூடுதல் பாதுகாப்பு கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. ஐஐடியில் பயிலும் மாணவி ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு நண்பருடன் தனது விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
#IIT-BHU student alleges #molestation on campus, thousands stage #protest
— The Indian Express (@IndianExpress) November 2, 2023
Read: https://t.co/brQyJJtFMA
Watch video: pic.twitter.com/2OrPO8nYMV
ஐஐடி வளாகத்தில் உள்ள கோயில் அருகே நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள், மாணவியை அங்கிருந்த மறைவான பகுதிக்கு இழுத்து சென்று, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது, மாணவியை முத்தமிட்டு மானபங்கப்படுத்திய மூவரும், அவரது உடைகளையும் கிழித்தெறிந்ததோடு அதனை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் போலீஸாரும், கல்லூரி நிர்வாகத்தினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி, மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு இடையே, சுவர் ஒன்றை எழுப்பி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பல்கலைக்கழக பதிவாளர், பல்கலைக்கழக வளாகத்தில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் எனவும், மாணவர்களின் நடமாட்டத்தை இரவு 10 மணி முதல் 5 மணி வரை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!