பகீர்... அடுத்தடுத்து 50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... கதற வைத்த பள்ளி முதல்வர்!

 
பாலியல் செக்ஸ் பலாத்காரம் கற்பழிப்பு பெண்

நாடு முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்விக்கூடங்களில், ஆசிரியர், முதல்வர், பேராசிரியர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள், தேர்வைக் காரணம் காட்டி, மாணவிகளை மிரட்டி, தங்களது இச்சைக்குப் பயன்படுத்தி வரும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. ஹரியானாவில், அரசு பள்ளியில் படிக்கும், 50க்கும் மேற்பட்ட மாணவியரிடம், பள்ளி முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சண்டிகர் மாநிலம் ஹரியானா, ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படிக்கும், 50க்கும் மேற்பட்ட மாணவியர், பள்ளி முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, மாநில மகளிர் கமிஷனிடம் புகார் அளித்தனர்.

More than 50 girl students of government school accused the principal of sexual  harassment

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யும்படி, போலீசாருக்கு மாநில மகளிர் கமிஷன் அறிவுறுத்தியது. இதற்கிடையே, பாலியல் புகாருக்கு உள்ளான பள்ளி முதல்வரை, மாவட்ட கல்வி நிர்வாகம் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து, பள்ளி முதல்வர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக, ஹரியானா மகளிர் கமிஷன் தலைவர் ரேணு பாட்டியா கூறியதாவது: பள்ளி முதல்வர் குறித்து மாணவியரிடம் இருந்து, 60க்கும் மேற்பட்ட எழுத்துப்பூர்வமான புகார்கள் வந்துள்ளன. மாணவியரை தன் அலுவலகத்திற்கு வரவழைத்து, பள்ளி முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமிக்கு பாலியல் சீண்டல்

இது தொடர்பாக, மாணவியரிடம் இருந்து, செப்., 13ல் புகார் வந்தது. அடுத்த நாளே நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு பரிந்துரை செய்தோம்.
ஆனால், அக்., 29 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, மாணவியர் மீண்டும் எங்களை தொடர்பு கொண்டனர். பின், ஜிந்த் மாவட்ட எஸ்.பி.,யுடன் நாங்கள் பேசியதை அடுத்து, இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, தலைமறைவான, 55 வயதாகும் பள்ளி முதல்வரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web