பகீர்... பாத்ரூமில் மனைவி சடலம்.. மகனிடம் நாடகமாடிய தந்தை!

 
சுஷிலா

எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் மனைவி வேலைக்கு சென்றதால் ஏற்பட்ட சண்டையில் அவரது கழுத்தை நெரித்து கணவரே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் வேத் பிரகாஷ் (52). இவரது மனைவி சுஷிலா (50). இந்த தம்பதிக்கு ஆகாஷ் என்ற மகன் உள்ளனர். பிரகாஷும் சுஷிலாவும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிறு சிறு விஷயங்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அது ஒரு கட்டத்தில் தினமும் நடக்க தொடங்கியது. மகன் ஆகாஷ் வீட்டின் மேல் பகுதியில் இருந்து வந்த நிலையில், பெற்றோர் கீழே வசித்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் வேலைக்கு செல்ல நினைத்த சுஷிலாவை, அவரது கணவர் பிரகாஷ் வேலைக்கு செல்ல சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறில் கைகலப்பு ஏற்படவே ஆத்திரத்தில் கணவர் பிரகாஷ், சுஷிலாவின் கழுத்தை இறுக்கமாக நெரித்துள்ளார்.

Murder

இதில் மூச்சு திணறி மயங்கிய சுஷிலாவை, தனது வீட்டின் பாத்ரூமில் ஒளித்து வைத்துள்ளார். சில மணி நேரம் கழித்து, தனது மகனை அழைத்துள்ளார். பின்னர் பாத்ரூமில் இருந்த சுஷீலாவை இழுத்து வந்து, கீழே விழுந்து மயக்கமடைந்து விட்டதாக நாடகமாடி உள்ளார். எனினும் அவர் துருவி துருவி கேட்டதையடுத்தே துப்பட்டாவால் கழுத்தை இறுக்க நெரித்து விட்டதாக கூறி அழுதுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ந்த மகன், தனது தாயை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அவரது உடல்களில் பலத்த காயம் இருப்பதும், கழுத்து நெறிக்கப்பட்டதும், நெற்றி போன்ற பல இடங்களில் காயங்கள் இருந்ததையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். 

Police-arrest

தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரிக்கையில், நடந்தவற்றை பிரகாஷ் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web