ஆசிய கோப்பை ஹாக்கி… பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட அனுமதி!

இந்தியாவில் ஆசிய கோப்பை ஹாக்கி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார் மற்றும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை நவம்பர் 28 முதல் டிசம்பர் 10, 2025 , சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் ஆண்கள் மற்றும் ஜூனியர் அணிகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த முடிவு, உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் பல நாடுகள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு அனுமதி மறுப்பது ஒலிம்பிக் சாசன விதிகளை மீறுவதாக அமையும் என விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. “பல நாடுகள் கலந்து கொள்ளும் போட்டிகளில் எந்தவொரு நாட்டையும் தடுப்பது ஒலிம்பிக் விதிகளுக்கு எதிரானது. ஆனால், இருதரப்பு விளையாட்டு நிகழ்வுகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது,” என அமைச்சக அதிகாரி கூறியுள்ளார்.
இந்த முடிவு, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றமான உறவுகள் மற்றும் பஹல்காம் தாக்குதல் (ஏப்ரல் 2025) மற்றும் ஆபரேஷன் சிந்தூர் (மே 2025) இவைகளின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் அணியின் பங்கேற்பு, விளையாட்டு மூலம் பன்னாட்டு ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒலிம்பிக் சாசனத்திற்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே, இந்த முடிவை வரவேற்றுள்ளார். “இது ஹாக்கி விளையாட்டுக்கு நல்ல முடிவு. பாகிஸ்தான் அணியின் வருகைக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்,” எனக் கூறியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஜூனியர் உலகக் கோப்பையில் ஒரே குழுவில் (பூல் B) இடம் பெற்றுள்ளன, இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!