அதள பாதாளத்தில் பாகிஸ்தானின் நிதி நிலைமை... புதிய அதிபராகிறாரா ராணுவத் தலைமைத் தளபதி?!

 
ஆசிப் முனீர்

பாகிஸ்தானின் நிதி நிலைமை அதள பாதாளத்திற்கு சரிந்துக் கொண்டிருக்கிறது. பஹல்காம் தாக்குதலுக்கு முன்பிருந்தே ஒரு கிலோ அரிசி ரூ.400யைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருந்த பாகிஸ்தானில், மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே தவித்து வந்தனர். இன்னொரு புறம் இந்தியாவின் நடவடிக்கையால் சிந்து நதி பாகிஸ்தான் மாகாணங்களில் தடுக்கப்பட்டதால் பாலைவனமாக மாறத் தொடங்கி தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் கனமழை என்று இயற்கையும் வஞ்சம் தீர்த்துக் கொள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது.

கடும் நிதி நெருக்கடியில் இருந்து மீள வழிதெரியாமல் தவித்து வருகிறது பாகிஸ்தான். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், அதிபர் ஆசிஃப் அலி சர்தாரிக்கு பதிலாக புதிய அதிபராகப் பதவியேற்க இருப்பதாக  சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், அந்தச் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்ற வதந்திகள் என  பாகிஸ்தான் ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.


இது குறித்து, பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் அஹமது ஷரீஃப் சௌத்ரி கூறுகையில், நாட்டை ஆட்சி செய்வதில், ராணுவத் தலைமைத் தளபதிக்கு எந்தவொரு ஆர்வமும் இல்லை எனக் கூறியுள்ளார். இத்துடன் அது போன்ற எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என விளக்கம் அளித்துள்ளார்.  நீண்டகாலமாக இணையத்தில் பரவி வரும் இந்தச் செய்தியை பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கடந்த ஜூலை 10ம் தேதி, வதந்தி எனக் கூறி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?