அகமதாபாத்தில் விளையாட பாகிஸ்தானின் மறுப்பு? ரசிகர்கள் ஏமாற்றம்!!

 
பாகிஸ்தான்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்- 2023 தொடங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்னும் போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிடவில்லை. 

இதனிடையே, போட்டிகள் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பரில் முடிவடையும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று பரவி வருகிறது. கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியின் போது பிசிசிஐ ஏற்கனவே ஐசிசியுடன் ஒரு வரைவு அட்டவணையைப் பகிர்ந்துள்ளது. 


அதில், அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மகிழ்ச்சியடையவில்லை என்று நம்பப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனது மீதமுள்ள உலகக் கோப்பை போட்டிகளை ஹைதராபாத், பெங்களூர், சென்னை மற்றும் கொல்கத்தாவில் விளையாட உள்ளது.

‘தி டெலிகிராப்’ நாளிதழில் வெளியான செய்தியின்படி, பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் அகமதாபாத் நகரில் விளையாட விரும்பவில்லை. அகமதாபாத்தில் விளையாட்டுக்கு அரசாங்கம் அனுமதி அளித்தாலும், ஐசிசி வீரர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் விரும்புகிறது.

பாகிஸ்தான்

இதனிடையே, வரைவு அட்டவணையை ஆய்வு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடர்பான கிரிக்கெட் விஷயங்கள் பாகிஸ்தான் வாரியத்தால் மதிப்பாய்வு செய்யப்படும், அதே நேரத்தில் பாதுகாப்பு மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பான எதையும் அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட பிற நிறுவனங்களால் கையாளப்படும், என்று கூறியது.

உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள்.. உத்தேச பட்டியல்

Draft schedule of India in World Cup:  

IND vs AUS, Oct 8, Chennai
IND vs AFG, Oct 11, Delhi
IND vs PAK, Oct 15, Ahmedabad
IND vs BAN, Oct 19, Pune
IND vs NZ, Oct 22, Dharamsala
IND vs ENG, Oct 29, Lucknow
IND vs Qualifier, Nov 2, Mumbai
IND vs SA, Nov 5, Kolkata
IND vs Qualifier, Nov 11, Bengaluru.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 

From around the web