93 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி.... சுருண்ட பாகிஸ்தான்....!!

 
eng vs pak

13வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.   மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.   இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

eng vs pak


 இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 44வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த்தது. தொடக்கம் முதல் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் ரன் குவித்தனர்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்  9 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 337 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 84 ரன்னும், ஜோ ரூட் 60 ரன்னும், பேர்ஸ்டோ 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

eng vs pak

பாகிஸ்தான் சார்பில் ஹரீஷ் ராஃப் 3 விக்கெட்டும், முகமது வாசிம். ஷாகீன் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.இதையடுத்து 338 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக அகா சல்மான் 51 ரன்களும், பாபர் அசாம் 38 ரன்களும், முகமது ரிஸ்வான் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. அதே சமயம் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் கை நழுவிப்போனது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web