மே மாத பாமாயில் , துவரம் பருப்பை ஜூன் மாதம் பெற்றுக் கொள்ளலாம்... தமிழக அரசு திடீர் அறிவிப்பு!

 
ரேஷன்

 தமிழகத்தில் மானியவிலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன்  அட்டைதாரர்கள் மே 2024 மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஜுன் 2024 மாதம் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் மூலம்  ரூ2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது, பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதனை  கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது.

ரேஷன்
கிடைத்த அளவு மட்டும் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை இன்னும் கொள்முதல் செய்து பிரித்து அனுப்ப காலதாமதம் ஆவதால் அடுத்த மாதம் அதாவது ஜூன் மாதத்தில் மே மாதத்துக்கான பாமாயிலையும், துவரம்பருப்பையும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  8,11,000 கிலோ துவரம் பருப்புமற்றும் 7,15,395 பாமாயில் பாக்கெட்டுகள் கிடங்குகளில் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பொருட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மீதம் பெற வேண்டிய துவரம்பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெற்று விரைவாக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாமாயில்

மே 2024 மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுன் 2024 மாதம் முதல் வாரம் வரை நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என  மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களின்   நன்மையினைக் கருத்தில் கொண்டு மே 2024 மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாதவர்கள்  ஜுன் 2024 மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!