பெற்றோர்களே உஷார்... ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்து பலி!
கடலூர் மாவட்டத்தில் ஒன்றரை வயது பெண்குழந்தை தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இரட்டை குழந்தைகளில் ஒருவரான குணஸ்ரீ வீட்டில், தண்ணீர் பக்கெட் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

எதிர்பாராதவிதமாக குழந்தை உள்ளே தவறி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடி அலைந்தனர்.

வீட்டிற்கு துக்கத்துடன் வந்த பெற்றோர் தங்கள் வீட்டிலேயே இருந்த பக்கெட்டில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
