செல்போன் வாங்கி தர மறுத்த பெற்றோர்.. விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

 
காதலிப்பதாக கூறி சிறுமி தொடர்ந்து பலாத்காரம்!! கர்ப்பமானதும் தப்பிக்க நினைத்த இளைஞர்!! திருச்சியில் கைது!

இருவரும் சென்னை ராயபுரம் பகுதியில் கணவன்-மனைவி கட்டிட வேலை செய்து வருகின்றனர், இவர்களுக்கு 15 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், வீட்டில் இருந்த போது, ​​கடந்த 30ம் தேதி, பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு கூறியுள்ளார்.

அவர்கள் மறுத்ததால் விரக்தியடைந்த மாணவி, பெற்றோர் வேலைக்குச் சென்றபோது வீட்டை விட்டு வெளியேறினார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர், மகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக மாணவி வீடு திரும்பினார்.

போக்சோ

போலீசார் நடத்திய விசாரணையில், சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் சென்ற அவர், அதே மாவட்டம் ஒட்டம்பட்டியைச் சேர்ந்த வரதராஜனை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததும், அங்கு மாணவியை வரதராஜ் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web