திருமணம் செய்து வைக்க மறுத்த பெற்றோர்கள்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

 
காட்பாடி இளைஞர் தற்கொலை
திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் கோபால் நகர் பகுதியில் சேர்ந்தவர்கள் சிவா - அமிர்தா தம்பதியினர். இவர்களின் இரண்டாவது மகன் சரத்குமார் (26) கூலி வேலை செய்து வருகிறார். சரத்குமார் கடந்த சில நாட்களாகவே தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோரிடம் கூறி வந்ததாக தெரியப்படுகிறது.

உயிரிழந்த இளைஞர் சரத்குமார்

இதனை அடுத்து காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே சரத்குமாரின் இருசக்கர வாகனம் கண்டெடுக்கப்பட்டது. கிணற்றில் சரத்குமார் சடலமாக மீட்கப்பட்டார். காட்பாடி தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உடலை மீட்ட விருதம்பட்டு காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்ற சரத்குமார் நேற்று வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இதற்கிடையே தனது தங்கைக்கு போன் செய்து தான் இறக்கப் போவதாக கூறியுள்ளார் அவர். மேலும் அவருடைய whatsapp ஸ்டேட்டஸில் ‘நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் இறக்கப் போகிறேன்’ என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் சரத்குமார் இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!