குழந்தை உயிரிழந்ததாக நினைத்து இறுதிசடங்கிற்கு தயாரான பெற்றோர்... அடுத்து நடந்த இன்ப அதிர்ச்சி!
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் இலக்கல் நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதி பசவராஜ் பஜந்திரி மற்றும் நீலம்மா . இவர்களுடை ஆண் குழந்தை சுவாச நோயால் அவதிப்பட்ட வந்தது. இதனையடுத்து குழந்தையின் இதய நோய் உட்பட பல உறுப்புகளும் செயலிழக்கத் தொடங்கின. கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாகல் கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர்கள் அனுமதித்த நிலையில் அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் உடல்நிலை மோசமாகியது.

இதனால் குழந்தை உயிர் பிழைக்க வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டனர். மிகுந்த சோகத்துடன் குழந்தையை பெற்றோர்கள் வீட்டுக்கு கொண்டு வந்ததும் குழந்தை மயக்கம் அடைந்து சுயநினைவை இழந்ததாகத் தெரிகிறது. இதனால் குழந்தை உயிரிழந்ததாக நினைத்த பெற்றோர் இறுதி சடங்கு செய்வதற்கான வேலையை தொடங்கிவிட்டனர். சில மணி நேரம் கழித்து குழந்தை திடீரென இருமிவிட்டு அழத் தொடங்கியது. குழந்தை உயிரிழந்த செய்தியை கேள்விப்பட்டு துக்கம் விசாரிக்க வீட்டிற்கு வந்தவர்கள் பெற்றோர் ஆனந்த கண்ணீர் விட்டனர். உடனடியாக குழந்தையை தர்காவுக்கு தூக்கிச் சென்று பிரார்த்தனை செய்தனர். இதன் பிறகு தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். தற்போது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகிவிட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
