எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய பள்ளிகளில் நீ...ண்ட வரிசையில் காத்திருந்த பெற்றோர்கள்!

 
பெற்றோர்கள்

  25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர்கள் விடிய விடிய பள்ளி வாசல்களில் காத்துக்கிடக்கின்றனர். ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.  தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2013 முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.  
இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கும் தனியார் பள்ளியில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இதன் காரணமாக 25 சதவீத இடஒதுக்கீட்டில்  குழந்தைகளை எப்படியாவது தனியார் பள்ளிகளில் சேர்த்து விட வேண்டும் என பெற்றோர்கள் தனியார்கள் பள்ளிகளில் இரவு முதலே காத்திருந்தனர். எல்கேஜி சேர்க்கை நேற்று தொடங்குவதாக தனியார் பள்ளிகள் இயக்குனர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  

45 காலி பணியிடங்களுக்கு 2,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன!
இதில் இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க மே 20ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பங்களை https://rte.tnschools.gov.in/ என்ற இணைய தளம் மூலம்  விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. அதன்படி  நெல்லையில் உள்ள தனியார் பள்ளிகளில் எல்கேஜி சேர்க்கைக்காக அந்த பள்ளிக்கூட வாசல்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய பலர் காத்திருந்தனர் 

மாணவர் சேர்க்கை
தனியார் பள்ளிகளை பொறுத்தவரை 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை என்பது 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். அந்த 1 கிலோ மீட்டர் பகுதியில் விண்ணப்பங்கள் 25 சதவிதத்திற்கு அதிகமாகப் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஒரு கிலோ மீட்டர் தொலைவில் குழந்தைகளின் விண்ணப்பங்கள் குறைவாக இருந்தால் மட்டுமே மற்ற விண்ணப்பங்கள் கணக்கிடப்படும்.   
எல்கேஜி அட்மிஷனுக்காக காத்திருந்த குழந்தைகளின் பெற்றோர்  ‘ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்பது தெரியவில்லை.  நேரடியாக விண்ணப்பிக்கலாம், என்றால்  ஒரே நாளில் விண்ணப்பங்கள் தீர்ந்து விட்டதாக பள்ளிகள் அறிவித்து விடும். அதனால் தான் விடிய விடிய பள்ளிக்கூட வாசல்களில் காத்துக்கிடக்க வேண்டிய நிலை உள்ளது.’ எனக் கூறியுள்ளனர்.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web