ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மூலம் பார்க்கிங் கட்டணம்... சென்னை மாநகராட்சி திடீர் முடிவு!

 
பார்க்கிங்
 

சென்னை மாநகராட்சியின்  வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  பொது இடங்களில் வாகன நிறுத்தங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில்  மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தி.நகர் உட்பட  170க்கும் மேற்பட்ட இடங்களில்  கட்டணம் வசூலிக்க ஒப்பந்த அடிப்படையில் டூர்க் மீடியா சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்எஸ் டெக் நிறுவனத்துக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியிருந்தது. இதில் இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என   மாநகராட்சி அறிவித்திருந்தது.  கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதை தடுக்க அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். அதில், வாகன நிறுத்த கட்டண விவரம் மற்றும் அதிக கட்டண வசூல் தொடர்பான புகார் தெரிவிக்க, கட்டண வசூல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சியின் உரிமம் பெற்ற ஆய்வாளர்   தொடர்பு எண்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டது.  

மெரினா கடற்கரை பார்க்கிங்
இந்நிலையில், மெரினா கடற்கரை பார்க்கிங் பகுதிக்கான ஒப்பந்தம் முடிந்த நிலையில், அங்கு வீதிமீறி கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.  மெரினா கடற்கரையில் ஒரு கார் ஓட்டுநரிடம் ரூ.300 கட்டணம் கேட்டுள்ளனர்.   மெரினாவில் சமீபகாலமாக  விதிகளை மீறி பேருந்து, வேன்களுக்கு ரூ.400 வரையும், கார்களுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரையும், 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.30 வரையும் கட்டணம் வசூலித்ததாகவும், அதற்கு ரசீதும் கொடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.  

பார்க்கிங்

இந்நிலையில்  மறு டெண்டர் விடும் வரை  வாகனங்களுக்கு, கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவிப்பு வெளியானது.  இதனிடையே, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, புதிய டெண்டர் விடும் வரை ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை வைத்து பார்க்கிங் கட்டணம் வசூலிக்கலாம் என  சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி ‘‘மெரினா கடற்கரை பெசன்ட் நகர் கடற்கரை, தி.நகர் பகுதிகளில் உள்ள மாநகராட்சி பார்க்கிங் பகுதிகளில்  விரைவில் அரசு சார்பு நிறுவனமான தமிழ்நாடு முன்னாள் படை வீரர் கழகம் மூலமாக கட்டண வசூல் பணிகளை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.  மறுடெண்டர் விடும் வரை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை வைத்து பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது “ என  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web