மெரினா, பெசண்ட் நகரில் பார்க்கிங் இலவசம்!

 
பார்க்கிங்

 சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில்    மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தியாகராய நகர் உட்பட  170 க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்  அடிப்படையில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.  

கார் பார்க்கிங் அடுக்கு பார்க்கிங் திநகர்
குறிப்பாக இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5ம், 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20ம் கட்டணமாக வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டண வசூலை தடுக்கும் வகையில் வாகனங்கள் நிறுத்த செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஸ்மார்ட் வாகனநிறுத்தம் செயல்படும் பகுதியில் 25மீட்டர் இடைவெளியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.   இந்த நிறுவனம் சென்னை மெரினா கடற்கரையில் முறையாக செயல்படவில்லை,  4 சக்கர வாகன ஓட்டிகளிடம் ரூ.300 வரை பார்க்கிங் கட்டணம் வசூலித்ததாக புகார்கள் எழுந்தன.  இதனை அடுத்து அந்நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.  

மெரினா கடற்கரை பார்க்கிங்
அந்த அடிப்படையில் சென்னையில் மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடங்களை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதே நேரத்தில் ரவுடிகளை வைத்து சிலர் மிரட்டி கட்டணம் வசூலித்து வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web