தொண்டையில் சிக்கிய பரோட்டா.. அடுத்த நொடியே மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி பரிதாப பலி!

 
சனந்தனன்

கன்னியாகுமரி பண்டாரவிளையை சேர்ந்தவர் சனந்தனன் (40). கட்டிட தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்துள்ளார். இதில் மனைவியும், மகளும்  தனியாக வசித்து வருகின்றனர். சனந்தனன் தனது தாய் மேரிபாயுடன் வசித்து வந்துள்ளார்.

கொலை

இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு உணவுக்காக கடையில் பரோட்டோ வாங்கி சாப்பிட்டுள்ளார். சாப்பிடும் போது பரோட்டோ தொண்டையில் சிக்கி விக்கல் ஏற்பட்டது. பின்னர், தாயிடம் தண்ணீர் வாங்கிச் சென்ற சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், உறவினர்களை அழைத்து வந்தார்.

பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சனந்தனனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேரிபாய் புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web