விண்ணைப் பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்... பார்த்தசாரதி கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

 
பார்த்தசாரதி

பாரதத்தில்  பார்த்தனுக்கு சாரதியாய் மீசை வைத்த திருக்கோலத்தில் நின்ற வீர நிலையில் திருவல்லிக்கேணியில் அருள் பாலித்து வருபவர்  பார்த்தசாரதி பெருமாள். பாரதியார் இந்த கோவிலுக்கு தான் அவர் வீட்டில் இருந்து நடந்தே வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இங்குபெருமாள்  நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வெங்கட கிருஷ்ணராகவும் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், யோகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார்.  

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி

இந்த கோவிலில் வருடத்தின் எல்லா நாட்களும் உற்சவம் தான் என்ற போதிலும் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் . அந்த வகையில் நடப்பாண்டில் சித்திரை திருவிழா மே 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தர்மாதி பீடம், புன்னைமர வாகனம், சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் பெருமாள் வீதி உலா வருகிறார்.  திருவிழாவின் 7ம் நாளான இன்று சித்திரை திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி

கோவிந்தா.... கோவிந்தா... என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் இழுத்து வருகின்றனர். செல்லும் வழியெல்லாம் தேரின் சக்கரத்துக்கு அடியில் உப்பும் , மிளகும்  வைத்து வழிபடுகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேருக்கு முன்பு நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டு திவ்ய பிரபந்தம் பாடி செல்கின்றனர். பக்தர்களின் கோவிந்தா முழக்கம் விண்ணை பிளக்கிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web