ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த பயணி... அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்திய சக பயணிகள்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தபோவன் எக்ஸ்பிரஸ் பூனே நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் நாசிக்கிலிருந்து மன்மார்ட் ரயில் நிலையத்தை நெருங்கிய போது பயணிகள் அபாய சங்கலியை பிடித்து இழுத்தனர். இதனால் ரயில் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரயில்வே கார்டு வந்து விசாரித்த போது 3 வது பெட்டியில் இருந்து பயணி ஒருவர் கீழே விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரயில் ஓட்டுநருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
கீழே விழுந்த பயணியை மீட்க ரயிலை பின்னோக்கி கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதனால் மன்மாட் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ரயிலை பின்னோக்கி கொண்டு செல்ல ஒப்புதல் கேட்டனர்.எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பின்னால் சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து அந்த ரயிலை தொடர்பு கொண்டு சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தபோவன் எக்ஸ்பிரஸ் ரயில் பின்னோக்கி 700 மீட்டர் தூரம் இயக்கப்பட்டதில் கீழே விழுந்த பயணி ரயிலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரை சக பயணிகள் ரயிலில் மீட்டு தயாராக இருந்த ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வரும் சர்வார் ஷேக் என்பது தெரியவந்தது. அவர் ரயிலில் இருந்து கீழே விழுந்ததால் தலையில் படுகாயம் ஏற்பட்டு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!