பகீர்... பயணிகள் ரயில் 9 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்து.. 7 பேர் கவலைக்கிடம்... 70 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ரஷ்யாவில் வடகிழக்கு பகுதியில் கோமி பகுதியில் உள்ள வோர்குடா நகரில் இருந்து நோவோரோஸிஸ்க் நகரில் 5000 கிமீ தொலைவில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. கோமி ரிபப்ளிக், இன்டா நகர் நகர் அருகே பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் பலர் காயம் அடைந்தனர்.
UPDATE:
— FlashFeed (@FlashFeed365) June 26, 2024
At least 5 people have suffered light injuries after at least 9 carriages of a passenger train derailed in Russia's Komi region, according to the Mash telegram channel.
The bad condition of the tracks may have contributed to the accident. pic.twitter.com/wXVnMZ9tZe
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த ரயிலில் மொத்தம் 14 பெட்டிகள் . அதிலில் மொத்தம் 232 பயணிகள் பயணித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கனமழை பெய்ததால் ரயில் தடம் புரண்டு இருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
