பதைபதைக்க வைக்கும் வீடியோ... மூடப்பட்ட கதவுகள்... ரயிலின் கண்ணாடிகளை உடைத்த பயணிகள்!

 
அந்தியோதயா


 
சமீபகாலமாக ரயில் பயணங்களில் சண்டைகள் , கைகலப்புக்கள் அதிகரித்து வருவது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில்பயணங்களை பொறுத்தவரை பொதுவாக சீட் மற்றும் இடம் குறித்த விஷயங்களில் பயணிகளுக்கு இடையே சண்டை ஏற்படுகிறது. சில சமயங்களில் இந்த சண்டைகள் பெரிதாகி போலீஸ் ஸ்டேஷன் வரை செல்லும் நிலைக்கு கூட சென்றிருக்கிறது.


உத்தரப்பிரதேசத்தில்  ஒரு ரயில் நிலையத்தை பயணிகள் சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் கண்ணாடிகளை கற்களால் உடைத்து, ரயில் நிலையத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.  இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் மங்காபூர் ரயில் நிலையத்தில்   சாஃப்ராவிலிருந்து மும்பை செல்லும் 15101 அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் மான்காபூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரயிலில் ஏற்கனவே பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால்  வெளியாட்கள் உள்ளே வராத வகையில் ரயிலின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், ரயிலில் ஏற நினைத்த பயணிகள் கதவுகள் மூடப்பட்டிருப்பதால் ஆத்திரம் அடைந்தனர்.

அந்தியோதயா
ரயிலின் கதவுகளை திறக்க முயன்றும், முடியாததால் ஆத்திரமடைந்த பயணிகள், ரயிலின் கண்ணாடிகளை கற்களைக் கொண்டு உடைக்கத் தொடங்கினர்.  இதனால் ரயில் சேதமானது. மான்காபூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் நடத்தையை கண்டு ரயிலில் இருந்த பயணிகள் பயத்தில் நடுங்கினர். பலர் ரயிலின் ஜன்னல்களையும் மூடினர். இச்சம்பவம் குறித்த  வீடியோக்கள்   சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!