வெடித்த சர்ச்சை... கப்பலில் நடுக்கடலில் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் பயணிகள்! வைரலாகும் வீடியோ!

 
கப்பல் கப்பல்


 
அமெரிக்காவில்  கார்னிவல் குரூஸ் கப்பல் ஒன்று மியாமி நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்தக் கப்பலில் திடீரென பயணிகளிடையே பயங்கர சண்டை மூண்டது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  ஆகஸ்ட் 18, 2025 திங்கட்கிழமை அதிகாலை, கப்பலின் கடைசி நாள் பயணத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது.


 சிக்கன் டெண்டர்ஸ் காரணமாக இந்த மோதல் தொடங்கியதாக கூறப்படுகிறது. கப்பல் பயணி ஒருவரால் பதிவு செய்யப்பட்ட காணொலியில்  இதற்காக கப்பலில் இருந்த பயணிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதும், சிலர் தரையில் விழுந்து உருளுவதும், மற்றவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மோதுவதும் பதிவாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


 அதே கப்பலில் பயணம் செய்த  மைக் டெர்ரா என்ற பயணி, இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர்  “கார்னிவல் கப்பல்கள் கேவலமானவை என்று எப்போதும் கேள்விப்பட்டிருக்கிறேன்.  பல ஆண்டுகளாக கப்பல் பயணம் செய்திருக்கிறேன், இப்படி ஒரு சம்பவத்தை முதல் முறையாக பார்க்கிறேன்,” என பதிவிட்டுள்ளார். மேலும் அவர்  காணொளியில், அவர் கேமராவை தன்னை நோக்கி திருப்பி, “சிக்கன் டெண்டர்ஸ் மீது சண்டை போடுவது பைத்தியக்காரத்தனம்,” என கூறுகிறார்.  பயணிகள் மத்தியில் இந்த சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?