பயணிகள் மகிழ்ச்சி... சென்னை – நாகர்கோவில் இடையே வாரத்தில் 4 நாட்கள் வந்தே பாரத் ரயில் இயக்கம்!

 
வந்தே பாரத்

தென்னக ரயில்வே உற்சாகமாக வரவேற்பை அறிவித்துள்ளது. இனி சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்பட உள்ளன.  நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு சொகுசு மற்றும் விரைவான பயணம் ஆகியவற்றை அளித்து வருகிறது.


இந்நிலையில் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரத்தில் நான்கு நாட்கள் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வந்தே பாரத்

வருகிற ஜூலை 11ம் தேதி 12, 13 ,14 ,18, 19 ,20, 21 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 1:50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து 2:20 புறப்படும் வந்தே பாரத் ரயிலானது இரவு 11 மணிக்கு சென்னை வந்தடையும்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web