ஏசி வேலை செய்யல.... அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்!

 
அபாய சங்கிலி


தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை விரைவு ரயில் தினமும்  இரவு 7.30மணிக்கு  புறப்படுகிறது.  இந்த ரயில் செங்கல்பட்டு தாம்பரம் விழுப்புரம் வழியாக நாகர்கோவில் செல்கிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் போதே முன்பதிவு செய்த  B-1 ரயில் பெட்டியில் ஏசி வேலை செய்யவில்லை என பயணிகள் புகார் அளித்தனர். பயணிகள் இது குறித்து தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

பெர்த்

 அதற்கு அதிகாரிகள் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு ரயில் செல்வதற்குள் ஏசி சரி செய்யப்பட்டுவிடும் எனக் கூறியுள்ளனர். செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்த பிறகும் ஏசி சரியாகவில்லை. இதனால்  ஆத்திரமடைந்த பயணிகள் செங்கல்பட்டில் ரயில் புறப்படும் போது அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஓடும் ரயிலில் பிறந்த நாள் கொண்டாட்டம்!!அபாயச் சங்கலியை இழுத்ததால் விளைந்த விபரீதம்!!

இதனையடுத்து ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு தற்காலிகமாக ஏசியின் பழுதை ரயில்வே ஊழியர்கள் சரிசெய்தனர். இதன் பிறகு ரயில் 40 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web