சென்னையில் பயணிகள் தவிப்பு... சென்ட்ரல் டூ விமானநிலையம் மெட்ரோ நாள் முழுவதும் ரத்து!

 
மெட்ரோ

சென்னையில் மெட்ரோ ரயில் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று நாள் முழுவதும் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு இடையேயான மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை முதல் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

சென்னையின் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக மெட்ரோ ரயிலை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வெயில் காலங்களில் சொகுசுப் பயணம், விரைவான மற்றும் பாதுகாப்பான பயணம், டிராபிக் நெரிசல் கிடையாது என்று பல காரணங்களால் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

மெட்ரோ

இந்நிலையில், இன்று காலை சென்னை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கிடையே உள்ள மெட்ரோ ரயில் பாதையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் நீல வழியில் உள்ள மெட்ரோ ரயில் சேவைகள் இன்று நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

விமான நிலையத்திற்கு பயணிக்கும் பயணிகள், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து விமான நிலையத்திற்கு பச்சை வழியில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மெட்ரோ ரயில்

அதேசமயம் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை இயக்கப்படும் நீல வழி மற்றும் சென்ட்ரல் மெட்ரோ முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை இயக்கப்படும் பச்சை வழி ஆகியவை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், ரயில் நிலையம் வந்து  அங்கிருந்து மெட்ரோ மூலம் அலுவலகம் செல்வோர் என்று தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web