அதிர்ச்சி... அரசு சுகாதார நிலையத்தில் மேல்கூரை இடிந்து விழுந்து நோயாளிகள் படுகாயம்.. கட்டிடத்தின் உள்ளே விஷப்பாம்பு!

 
சங்கராபுரம் துணை சுகாதார நிலையம்

சங்கராபுரம் அருகே சிதலமடைந்து காணப்படும் துணை சுகாதார நிலையம் நோயாளிகளின் உயிரைக் கருத்தில் கொள்ளாத சுகாதாரத்துறை புதிய துணை சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பொய்குணம் கிராமத்தில் கடந்த 1988 ஆம் ஆண்டு தமிழக அரசால் கட்டப்பட்ட அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ளது இந்த ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் தற்போதைய நிலை மிகவும் சிதலம் அடைந்து காணப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிதலம் அடைந்த உள்ள இந்த ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும் சட்டமன்ற உறுப்பினர் இடமும் மருத்துவ சுகாதாரத் துறைகளிடமும் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த சுகாதார நிலையமானது மேல் கூரைகள் இடிந்து விழுந்து பல பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த பத்து நாளுக்கு முன்பு கதவை திறக்கும் பொழுது 7 அடி நீளம் உள்ள விஷப்பாம்பு உள்ளிருந்து வெளியே வந்ததால் அலறடித்து செவிலியர் ஓடியதாகவும் கூறப்படுகிறது.

Sankarapuram, Kallakurichi : சங்கராபுரம்: சங்கராபுரம் காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட இரு வேறு இடங்களில் விபச்சார வழக்கில் மூன்று பெண்கள் உட்பட  நான்கு ...

அதனைத் தொடர்ந்து சுற்றுச் சுவர் உடைந்து கிடப்பதாலும் கதவுகள் ஏதும் இல்லாததாலும் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மதுவை அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்கள் உள்ளே போட்டு விடுகிறார்கள் என கூறப்படுகிறது இது போன்ற மோசமான நிலை உள்ள இந்த அரசு ஆரம்பத் துணை சுகாதார நிலையத்தில் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகிறது சிதலமடைந்து  விழும் நிலையில் உள்ள இந்த சுகாதார நிலையத்தில் மாத்திரைகள் வாங்க வருவோர் அச்சத்துடனே வந்து செல்கிறார்கள் சுகாதாரத்துறை ஊழியர்களும் நோயாளிகளின் நலனில் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து சிதிலமடைந்து உள்ள கட்டடத்தில் சிகிச்சை அளித்து வருகிறனர்.

அதனால் அச்சமடைந்த மக்கள் சோழம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அலைவதாக புலம்பி வருகிறனர் எனவே இந்த அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை இடித்து விட்டு புதிதாக துணை சுகாதார நிலையம் அமைத்து தரும்படி பொய் குணம் கிராம பொதுமக்கள் சார்பாக முதல்வர் அவர்களுக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி தலைவருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். பொய்குணம் மக்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றித் தருமா? கிராம பொது மக்களின் கோரிக்கை.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web