பத்திரம் மக்களே... தகிக்கும் சூரியன்.. உருகும் தார் சாலைகள்... நிறைய தண்ணீர் குடிங்க.. கொதிக்குது பூமி!

 
தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில்! பொதுமக்கள் அவதி!

ரொம்ப பத்திரமா இருங்க மக்களே... நிறைய மாவட்டங்களில் சதத்தைக் கடந்தும் சுட்டெரிக்குது சூரியன். தார் சாலைகளில் உஷ்ணத்தில் உருகி வழிகிற அளவுக்கு பூமி கொதிக்குது. நிறைய நீர் சத்துக்களை எடுத்துக் கொள்ளுங்க. கத்திரி வெயில் ஆரம்பித்துள்ள நிலையில், குழந்தைகளும், வயதானவர்களும் வீட்டை விட்டு, அவசியமில்லாம வெளியே வராதீங்க. இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.  அத்துடன்  மோக்கா புயல் காரணமாக ஈரப்பதம் முற்றிலும் உரிஞ்சப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்து வருகிறது. 

வெயில்

இதனால், வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அந்த வகையில் இன்று மட்டும் தமிழகத்தில்17 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. சென்னை, திருச்சி, தூத்துக்குடி, வேலூர், விருதுநகர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

வெயில்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 18ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சென்னையில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரிப்பதால், அதிகளவு வெப்பம் தாங்க முடியாத நிலை, மயக்கம் உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம்.

பொதுமக்கள் வெப்பம் அதிகம் உள்ள நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும்,  குறிப்பாக வயதானவர்கள் , குழந்தைகள்  கத்திரி வெயிலை தவிர்ப்பது நல்லது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web