தமிழகத்தில் பட்டா, சிட்டா ஆவணம்... இன்று முதல் நடைமுறை!

 
பட்டா சிட்டா ஆவணம் பத்திரப்பதிவு

தமிழகத்தில் பட்டா, சிட்டா, பதிவு செய்யப்பட்ட மனைபிரிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 2016 அக்டோபர் 20க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு, எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என, சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி அறிவித்திருந்தார்.

பத்திரபதிவு பட்டா பத்திரம் ஸ்டாம்பேப்பர்

அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், வரும் ஜூலை 1 முதல் onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

பட்டா

இது போல மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை 1 முதல் நவம்பர் 30 வரை www.tnhillarealayoutreg.in என்ற தளத்திற்குப் பதிலாக, www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த இணையதளம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது