பவன் கல்யாண் துணை முதல்வர்.... நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு அமைச்சர் பதவி!
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்த தேர்தலில் பாஜகவுடன் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இந்நிலையில் தற்போது 25 பேர் அடங்கிய ஆந்திர அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் பெயர் இடம்பெற்றுள்ளது.
அவர் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போன்று நடிகர் பாலகிருஷ்ணா திரைப்படத்துறை அமைச்சராகவும், ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இவருக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் வெளியாகி ஆந்திர அரசியலில் பரபரப்[பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இதன் உண்மைத் தன்மை குறித்து இன்னும் தகவல்கள் உறுதியாகத் தெரியவில்லை.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!