பிடிஓ கடத்தல் விவகாரம்... பஞ்சாயத்து செயலர் உட்பட 2 கைது!

 
செயலர்
 


நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓவாக பணிபுரிந்து வருபவர் 54 வயது பிரபாகர்.  இவர் நாமக்கல் ஜெட்டித்தெருவில் மனைவி, மகள்களுடன் வசித்து வருகிறார். செப்டம்பர் 4ம் தேதி இரவு  பணிகளை முடித்து விட்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.  இரவு 9.45 மணிக்கு அவரது மனைவி யசோதா, அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சில மணி நேரத்தில், யசோதாவை வேறு ஒரு செல்போனில் இருந்து பிரபாகர் தொடர்பு கொண்டார். 
அப்போது, தன்னை சிலர் காரில் கடத்திச்செல்வதாகவும், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுப்பதாகவும்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து யசோதா  காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக அனைத்து சோதனைச்சாவடிகள், டோல்கேட்டுகள் உஷார்படுத்தப்பட்டன. பிடிஓ கார் சென்ற வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் சேகரிக்கப்பட்டன.  

போலீஸ்


டிஎஸ்பிகள் நாமக்கல் தன்ராஜ், திருச்செங்கோடு கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் வேலகவுண்டம்பட்டியில் சலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பிரபாகரின் காரை கண்டறிந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், பிடிஓவை கடத்திச் சென்ற காரின் பதிவெண் அடிப்படையில்  அதன் உரிமையாளரை ஈரோட்டில் பிடித்து விசாரித்தனர்.அப்போது  அழைப்பிதழ் கொடுப்பதற்காக இன்னோவா காரை வாடகைக்கு எடுத்ததாக தெரிவித்தார்.  

இந்த விசாரணையில் நந்தகுமார், கூலிப்படை அமைத்து பிடிஓவை கடத்தி வைத்துள்ளது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில், கடத்தல் காரை போலீசார் பின்தொடர்ந்தனர். புதுக்கோட்டை நல்லூர் டோல்கேட்டில், பிரபாகரை இறக்கி விட்டு, அவரிடமிருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாகினர். இதையடுத்து, மறுநாள் சனிக்கிழமை காலை நல்லூர் டோல்கேட்டிலிருந்து இரவல் போனில், மனைவியிடம் பேசிய பிடிஓ பிரபாகர், பஸ் பிடித்து நாமக்கல் வருவதாக தெரிவித்துள்ளார். இதன் பேரில், திருச்சி விரைந்த போலீசார், பிரபாகரை மீட்டு நாமக்கல் அழைத்து வந்தனர்.   
அவர் பொறுப்பேற்றதும் ஊராட்சி செயலரான நந்தகுமார், பணியில் அலட்சியமாக இருந்ததையும்  ஊராட்சி பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் போடாமல், தன்னிச்சையாக செயல்பட்டு வந்ததாலும், பிடிஓ கண்டித்துள்ளார்.  

 

போலீஸ்
மேலும், பிடிஓவிடம் அதிக பணப்புழக்கம் இருப்பது குறித்து, தனது நண்பரான கீழ் காலனியில் பழைய இரும்பு கடை வைத்துள்ள தாடி ஈஸ்வரனிடம் தெரிவித்தார்.  இதையடுத்து, இருவரும் கூலிப்படை அமைத்து, பிடிஓவை கடத்திச்சென்று பணம் பறிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.  
இதற்காக ரூ 2500 ஐ நந்தகுமார் முன்பணமாக கொடுத்துள்ளார். தொடர்ந்து ஈரோடு வைராபாளையம் பகுதியில் வசித்து வருபவர் யைச் சேர்ந்த டிரைவர் சிவா(29), காரை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். காரில் பள்ளிபாளையத்தில் கூலிப்படை கும்பல் காத்திருந்தது. பிடிஓவின் நடவடிக்கையை கண்காணித்து வந்த ஊராட்சி செயலர் நந்தகுமார், உடனுக்குடன் கூலிப்படைக்கு தகவல் கொடுத்து வந்தார்.   இதையடுத்து, நாமக்கல் வந்த காரை, அய்யம்பாளையம் பிரிவு ரோடு அருகே போலீசார்  மடக்கினர்.  டிரைவர் சிவாவை கைது செய்தனர்.  ஊராட்சி செயலர் நந்தகுமாரும் கைது செய்யப்பட்டார். 
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?