ரூ.5க்கும் கீழே உள்ள பென்னி ஷேர்... அந்நிய முதலீட்டை அள்ளி கடனில்லா நிறுவனமாக திகழ முடிவு!

 
விகாஸ்

விகாஸ் ஈகோடெக் லிமிடெட் 2023-24 நிதியாண்டில் கடன் இல்லாத நிறுவனமாக மாறும் என்று அறிவித்துள்ளது.  மொரிஷியஸை தளமாகக் கொண்ட FII AG டைனமிக் ஃபண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து சமீபத்தில் முதலீட்டை ஈர்த்த ஸ்மால்-கேப் நிறுவனம், 2023-24 நிதியாண்டிற்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாறத் திட்டமிட்டுள்ளதாக இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபிக்கு தெரிவித்துள்ளது.

இந்திய பங்குச்சந்தைகளுக்கு அதன் கடன் குறைப்புத் திட்டங்களைப் பற்றி தெரிவிக்கையில், மொரிஷியஸை தளமாகக் கொண்ட இந்த எஃப்ஐஐ-ஆதரவு பெற்ற ஸ்மால்-கேப் நிறுவனம், "விகாஸ் ஈகோடெக் லிமிடெட், அதன் வரையறுக்கப்பட்ட கடன் குறைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வங்கிக் கடன்களை மேலும்  திருப்பிச் செலுத்தியுள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது எனக்கூறியுள்ளது.  அதாவது கடன் அளவைக் குறைத்து ரூபாய் 548 மில்லியன் ( ₹54.80 கோடி) ஒரு ZERO கடன் நிறுவனமாக மாறுவதற்கு வழி வகுக்கிறது எனத்தெரிவித்துள்ளது."

இந்த கடன் குறைப்பு திட்டத்தை மேற்கொள்ளும் போது, ​​நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் விடாமுயற்சி மற்றும் ஆதரவின் பேரில், நிறுவனத்தின் நிர்வாகம் 2023-2024 நிதியாண்டிற்குள் 100 சதவிகிதம் கடன் இல்லாத நிறுவனமாக மாற முடிவு செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறது.

விகாஸ் தொழிற்சாலை

சமீபத்தில், மொரிஷியஸை தளமையிடமாகக் கொண்ட வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் ஏஜி டைனமிக் ஃபண்ட்ஸ் லிமிடெட் இந்த ஸ்மால் கேப் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியது. பங்குகளை வாங்குவது விகாஸ் ஈகோடெக் லிமிடெட் நிதி திரட்டும் உந்துதலுக்கு ஏற்ப இருந்தது, ஸ்மால்-கேப் நிறுவனம் ஏஜி டைனமிக் ஃபண்ட்ஸ் லிமிடெட் மற்றும் மற்ற இரண்டு எஃப்ஐஐகளுக்கு புதிய பங்குகளை ஒதுக்கியது.  மற்ற இரண்டு எஃப்ஐஐக்கள் விகாசா குளோபல் ஃபண்ட் பிசிசி- யூபிலியா கேபிடல் பார்ட்னர்ஸ் ஃபண்ட் I மற்றும் கலிப்சோ குளோபல் முதலீட்டு நிதி நிறுவனங்களாகும்.

BSE இணையதளத்தில் உள்ள தகவலின்படி, மொரீஷியஸைத் தலைமையிடமாகக் கொண்ட FII க்கு 8,04,00,000 நிறுவனப் பங்குகளை நிறுவனத்தின் நிதி திரட்டும் குழு ஒப்புதல் அளித்துள்ளது, அதேசமயம் 8,03,00,000 பங்குகள் Vikasa Global Fund PCC- Eubilia Capital Partners Fund Iக்கு ஒதுக்கப்பட்டது.  நிதி திரட்டும் குழு 1,78,00,000 பங்குகளை கலிப்சோ குளோபல் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்டிற்கு ஒதுக்கியுள்ளது.  இந்தப் பங்குகள் ஒவ்வொன்றும் ரூபாய் 2.80 என்ற விலையில் ஒதுக்கப்பட்டன.  அதாவது நிறுவனத்தில் இந்த எஃப்ஐஐ முதலீட்டில் இருந்து திரட்டப்பட்ட நிகர நிதி ரூபாய் 49.98 கோடி.  இந்த 49.98 கோடியில், ஏஜி டைனமிக்ஸ் ஃபண்ட்ஸ் லிமிடெட் இந்த பென்னி பங்கை ரூபாய் 22.51 கோடிக்கு வாங்கியுள்ளது.

விகாஸ் எஃகோ டெக்

விகாஸ் ஈகோடெக் பங்கின் விலை இன்று ஒவ்வொன்றும் ₹3.28 ஆக உள்ளது, அதாவது இந்த எஃப்ஐஐகள் அனைத்தும் தங்கள் முதலீட்டில் ஒரு பங்கிற்கு ரூபாய் 0.46 லாபமாக பெற்றுள்ளன.  சதவீத அடிப்படையில், இந்த எஃப்ஐஐக்கள் அந்தந்த முதலீடுகளின் மீது சுமார் 16.50 சதவிகித  வருமானத்தைப் பதிவு செய்துள்ளனர்.

விகாஸ் ஈகோடெக் லிமிடெட் முதன்மையான சேர்க்கைகள் மற்றும் சிறப்பு பாலிமர் கலவைகளை மையமாகக் கொண்ட சிறப்பு இரசாயனங்கள் உற்பத்தி செய்யும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. நிதிநிலைகளின்படி, விகாஸ் ஈகோடெக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூபாய் 256 கோடியாக இருக்கிறது. நிகர விற்பனை Q3FY22 ஐ விட Q3FY23ல் 48 சதவிகிதம்  அதிகரித்துள்ளது.  நிகர விற்பனை FY21 ஐ விட FY 22 ல் 115.51 சதவிகிதம்  உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் எவ்வித ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் பிஎஸ்சியில் ரூபாய் 3.34க்கு நிலை பெற்றது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!

From around the web