அட.... உலகில் முதல்முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறுவிடுப்பு!

 
பெல்ஜியம்

 உலக நாடுகளில் முதன் முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல சட்டத்தை அமல்படுத்தியுள்ளது  பெல்ஜியம் அரசு. இச்சட்டம்  அந்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு   93 உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். 33 பேர் எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. யாருமே இந்த சட்டத்தை எதிர்க்கவில்லை என்பதால் பாலியல் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல சட்டம் நிறைவேற்றப்பட்டது. 
2022ல்  ஐரோப்பாவில் முதல் நாடாக பாலியல் தொழிலாளர்களை சுய தொழில் செய்பவர்களாக அங்கீகாரம் அளித்தது  பெல்ஜியம் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து வெளியான தகவலின் படி  பாலியல் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை பெல்ஜியம் அரசு அங்கீகரித்துள்ளது. 
 நீதிமன்றம்
இந்த சட்டத்தின் படி, பாலியல் தொழிலாளர்கள், உடல்நலக் காப்பீடு,  வேலையின்மை காலத்தில் ஓய்வூதியம், அவர்களின் குடும்ப நலன்கள், அவர்களுக்கான குறிப்பிட்ட கால இடைவெளி விடுமுறைகள், மகப்பேறு விடுப்புகள் ஆகியவை வழங்கப்படும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் அவர்களுக்கு ஒரு வாடிக்கையாளரை பிடிக்கவில்லை என்றாலோ, குறிப்பிட்ட பாலியல் செயல் பிடிக்கவில்லை என்றாலோ அதனை மறுக்கும் உரிமையும் தொழிலாளருக்கு உண்டு.  தாங்கள் விரும்பியபடி பாலியல் செயலைச் செய்ய அவர்களுக்கு உரிமையுண்டு, அதே போல் எந்த காரணமும் சொல்லாமல் எந்த நேரத்திலும் பாலியல் தொழிலிருந்து வெளியேறலாம். அவர்களின்  ஒப்பந்தத்தை முடித்து கொள்ளும் உரிமையும் உண்டு. அப்படி செய்தாலும்  அவர்களுக்கான ஓய்வூதிய உரிமையை இழக்க மாட்டார்கள் என உறுதி அளித்துள்ளது.  

பெல்ஜியம்
பாலியல் தொழிலை விட்டுவிட்டு  வேறு வேலைகளுக்கு செல்லவும் அவர்களுக்கு உரிமை உண்டு.   எந்த பாரபட்சமும் இல்லாமல் எந்த வேலைக்கும் தகுதி இருந்தால்  விண்ணப்பித்து பயனடையலாம்.  வேறுவேலைக்கு செல்லும் போது பாலியல் தொழில் பற்றி கூறவேண்டியதில்லை. வெறுமனே பெயரையும், கல்வித்தகுதியையும் மட்டும் குறிப்பிட்டாலே போதுமானது. அவர்களின் பெயர் பொதுவெளியில் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்படும்.
 
அதே போல, ஒரு பாலியல் தொழிலாளி 6 மாதங்களுக்கு மேலாக வேலை செய்யாமல் இருந்தால், அவர்களை பாலியல் நிறுவன உரிமையாளர் அவரை பணிநீக்கம் செய்யலாம்.  இந்த சட்டம்  ஆபாச நடிகர்கள், இணையதளம் வாயிலாக பாலியல் தொழில் செய்யும் நபர்களுக்கு பாலியல் தொழிலாளர் சட்டம் பொருந்தாது எனவும் அந்நாட்டு சட்டம் கூறியுள்ளது.  விரைவில் இந்த சட்டம் அமலாக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web