அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் ? நீதிமன்றம் திடீர் உத்தரவு!

 
அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள் மக்களுக்குச் சேவை செய்யும் முதுகெலும்பாக இருப்பதால், அவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு வழங்கி வருகிறது. அகவிலைப்படி உயர்வு, மகப்பேறு விடுப்பு காலம் அதிகரிப்பு, ஈட்டிய விடுப்பிற்கு பணப்பலன் உள்ளிட்ட பல சலுகைகள் அமலில் உள்ளன. இருந்தபோதிலும், அரசு ஊழியர்கள் முக்கியமாக கோருவது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பதே. 2003 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டம் பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தொடர்ந்து சொல்லப்பட்டதால், பழைய திட்டத்திற்காக ஊழியர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதற்காக ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து அரசு ஆய்வு நடத்திவருகிறது.

தமிழ்நாடு அரசு

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் ஏங்கெல்ஸ் எனும் நபர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். 2003 முதல் அமல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு தெளிவான விதிமுறைகள் வகுக்கப்படவில்லையெனவும், மத்திய அரசு 2013ல் வெளியிட்ட வழிகாட்டுதல்களையும் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தாததாகவும் அவர் மனுவில் குற்றம்சாட்டினார். குழு வழங்கிய அறிக்கையைப் பின்பற்றி விதிமுறைகள் வெளியிடப்படாததால், பல அரசு ஊழியர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.

பகீர்... 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாச சம்பளம் தரல... மோசடியில் சிக்கிய ரூ. 230 கோடி  ! 

மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ஓய்வூதியம் தொடர்பாக மனுதாரருக்கு தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணை நவம்பர் 19க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு எதிர்கால ஓய்வூதிய திட்டம் குறித்து எவ்வாறு பதிலளிக்கிறது என்பது ஆவலாகக் காக்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!