மக்களே உஷார்!! சுழற்றி அடிக்கப்போகுது ’மோக்கா’ புயல்!!

 
அசானி புயல்

தமிழகத்தின் வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் புதிய புயல் மோக்கா உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அக்னி நட்சத்திர காலத்திலும் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து மக்கள் உற்சாகத்துடன் கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இது குறித்து வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை  மே7ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி, புயலாக வலுபெறக் கூடும்.

புயல்

இதன் காரணமாக இன்று முதல் 9ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் தமிழகத்தில்  விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது..மே 7ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

மழை

இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் 'மோக்கர் புயலாக வலுவடையும் ஒடிசா மேற்கு வங்கம் நோக்கி புயல் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. வடக்கு நோக்கி 'மோக்கா' புயல் தமிழக வளிமண்டலத்தில் நிலவும் ஈரப்பதம் ஈர்க்கப்பட வாய்ப்பு இதனால், தமிழகத்தின் வளி மண்டலத்தில் வறண்ட வானிலை உருவாகக்கூடும். இதன்காரணமாக தமிழகத்தில் 8ம் தேதிக்கு பிறகு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு மழையும் படிப்படியாக குறையும்.வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு பல நாடுகள் பெயர் வைக்கின்றன அந்த வகையில் 2023ம் ஆண்டில் வங்கக்கடலில் உருவாக இருக்கும் புயலுக்கு பெயரிட்ட நாடு ஏமன்.  அந்நாடு சூட்டிய பெயர்  தான்”மோக்கா” . இதற்கு காஃபிக்கொட்டை என்றும் அர்த்தம் உண்டு.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web