கொத்து கொத்தாக மண்ணில் புதைந்த மக்கள்... 622 பேர் பலி; ஆப்கான் நிலநடுக்கத்தில் 1300 பேர் படுகாயம்!

 
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் தலைநகரில் காபூல் மாகாணத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் ரிக்டர் 6 ஆக பதிவாகி இருந்த நிலையில், ஆப்கானில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. 

இதுவரையில் ஆப்கானிஸ்தானில் கொத்து கொத்தாக மக்கள் புதையுண்ட நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது வரையில் பலியானவர்கள் எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதால் மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. 1300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் அபாய கட்டத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் பல பகுதிகளில் கட்டடங்கள் முழுமையாக இடிந்து மண்ணுக்குள் புதைந்து விழுந்த நிலையில் மீட்பு பணிகள் சிரமத்தை கொடுத்துள்ளன. 

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6ஆகவும், அடுத்ததாக ஏற்பட்ட நிலநடுக்கம் 4.5ஆக பதிவாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?