பிற மாநில மக்கள் கன்னட மொழி தெரியாமல் இருக்க கூடாது.. துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வார்னிங்!

 
டி.கே.சிவக்குமார்

கர்நாடகாவில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் நவம்பர் 1ம் தேதி கன்னட கொடி ஏற்ற வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.கர்நாடக உதயமான தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியதாவது: கர்நாடகாவில் செயல்படும் கல்வி மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கன்னட கொடி கட்டாயம் பறக்க விடப்பட வேண்டும்.

கன்னடம் தெரியாமல் கர்நாடகாவில் வாழ முடியாது என்பதை பிற மாநில மக்கள் உணர வேண்டும். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்று கல்வி நிறுவனங்களில் நவம்பர் 1ம் தேதி கன்னட கொடி ஏற்றி கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். கன்னடக் கொடியை ஏற்றாத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், வணிகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கன்னட ஆதரவு அமைப்புகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கர்நாடகா மாநிலம் நவம்பர் 1, 1956 அன்று மைசூர் மாநிலமாக உருவாக்கப்பட்டது. பின்னர் 1973 நவம்பர் 1 ஆம் தேதி கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.அன்றைய தினத்தை கர்நாடக மாநிலம் பிறந்த நாளாக மாநில அரசு கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!