ஆனி மாத அமாவாசை... தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்!

 
தமிழக முக்கிய ஆன்மிக தலயங்களில், இன்று தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! பொதுமக்கள் அதிருப்தி!

 ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இன்று ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் வழிபட்டனர். ஆனி மாத அமாவாசை என்பதால் ராமேஸ்வரத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

தமிழக முக்கிய ஆன்மிக தலயங்களில், இன்று தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! பொதுமக்கள் அதிருப்தி!

அதனைத் தொடர்ந்து கோயிலுக்குள்ளே காவேரி, சேது மாதவர், மகாலட்சுமி உள்ளிட்ட 22 புனித தீர்த்தங்களில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திப் உத்தரவின் பேரில் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் ராமேஸ்வரம் தீவு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்ப்பணம்
இதே போல், பவானி கூடுதுறை, கோவை பேரூர் நொய்யல் படித்துறை, திருச்சி காவிரி ஆறு, திருநெல்வேலி தாமிரபரணி ஆறு, தஞ்சாவூர் பாபநாசம் ஆகிய நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதையடுத்து இப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web