இன்று ஆக்ஸ்போர்டில் பெரியார் உருவப்படம் திறந்து வைப்பு!
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று செப்டம்பர் 4ம் தேதி லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொண்டார். அங்கு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தந்தை பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைக்கிறார்.

மேலும், திராவிட இயக்கம் ஏற்படுத்திய சமூக மாற்றங்களை விளக்கி, “The Dravidian Pathway” w “The Cambridge Companion to Periyar” ஆகிய நூல்களையும் வெளியிடுகிறார். இந்த நூல்கள் பெரியாரின் சீர்திருத்தங்கள், தத்துவம் மற்றும் சமூக மாற்றத்திற்கு அவரது பங்களிப்புகளை விளக்குவதாக அமைந்துள்ளன.

இந்நிகழ்வு, பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்தும் வகையில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தப் பெரியார் உருவப் படத்தை பிரபல இந்திய கலை வடிவமைப்பாளர் தோட்டா தரணி வரைந்துள்ளார். இன்று இந்திய நேரப்படி இரவு 10. 11 மணி வரை நடக்கும் நிகழ்வில் பெரியாரின் மரபு மற்றும் திராவிட சிந்தனையின் ஆழமான தாக்கம் குறித்து முதலமைச்சர் உரை நிகழ்த்துகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
